திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.09.2025) செங்கம் வட்டம், பாய்ச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டார்.
அவர், மாணவ–மாணவியர்களின் வருகை நிலை மற்றும் ஸ்மார்ட் திரையரங்குகள் மூலம் நடைபெறும் கற்பித்தல் முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசித்தல் திறன்களை நேரடியாக பரிசோதித்தார்.

