திருக்கார்த்திகை தீப திருவிழா – 2025 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று (24.11.2025) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 10 நாட்களும் திருவிழா நடைபெறும். பத்தாம் நாளான புதன்கிழமை ( 03.12.2025 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

