கலசபாக்கம் மேல் தெருவைச் சேர்ந்த திரு ஆறுமுகம் மற்றும் திருமதி சகுந்தலா தம்பதியர்களின் மகளான திருமதி தேன்மொழி அவர்கள், தற்போது கலசப்பாக்கம் தாலுகா தாசில்தாரராக பொறுப்பேற்று தங்கள் பணியை தொடங்கியுள்ளார்….நம் ஊரைச் சேர்ந்தவர் தற்போது தாசில்தாராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமையான நிகழ்வாகும்.
தமிழ்நாடு அரசின் குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்று, படிப்படியாக மாநில அரசுத் துறையில் முன்னேறி வந்த இவர், தற்போது நம் பகுதியில் தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டது நம் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chengam.inThenmozhi Appointed as Kalasapakkam Taluk Tahsildar – A Proud Moment for the Region சார்பில், திருமதி தேன்மொழி அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அவர் மக்களின் நலனுக்காக பல நன்மிகு திட்டங்களை மேற்கொண்டு, சிறப்பான நிர்வாக சேவைகளை வழங்கி, நம் ஊருக்கு மேலும் பெருமை சேர்க்கும் படியாக செயல்பட வாழ்த்துகிறோம்.
அவரது பெற்றோர்களான திரு ஆறுமுகம் மற்றும் திருமதி சகுந்தலா தம்பதியர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.