விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார். சிறுமி தனுமிதாவின் வெற்றி நிச்சயமாக்க, இந்த தருணத்தில், நமது ஆதரவை தெரிவித்து மகிழலாம். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் […]
அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (06.01.2025) உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 2 – ஆம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான இன்று காலை விநாயகர், மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மாட வீதிஉலா நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!
இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 11 லட்சம் ஆண்கள். 3 கோடியே 24 லட்சம் பேர் பெண்கள்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் திருவிழாவில் வணிகத் தலைமை குறித்து உரையாற்றிய Business leadership பயிற்சியாளர் JB SOFT SYSTEM திரு ஜெ .செந்தில் முருகன்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா, இன்று (05.01.2025) திருவண்ணாமலை மாநகர தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள, மாதவி பன்னீர்செல்வம் திருமண மஹாலில் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் Business Leadership பயிற்சியாளர் JB Soft System திரு. ஜெ. செந்தில் முருகன் அவர்கள், “வணிக தலைமைத்துவம்” (Business Leadership) தொடர்பாக சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் FAIRA கூட்டமைப்பின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மொத்தத்தில், […]
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவு
சிறப்பு ரயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலிக்கு ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம். சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
சமூக வலைதள கணக்கு – பெற்றோர் அனுமதி அவசியம்
18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை. சம்பந்தப்பட்ட தளங்கள் உறுதி செய்வதையும் டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகளின்படி கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்.
அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவம் தொடக்கம்!!
அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவ கொடியேற்று விழா ஜனவரி 5-ஆம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து, விநாயகர் மற்றும் சந்திரசேகர் அம்பாள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, தினமும் காலை மற்றும் மாலை மாட வீதிகளில் உலா செல்லவுள்ளனர். 10-வது நாள், தை முதல் நாள் (ஜனவரி 14) அன்று தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.
இன்று முதல் டோக்கன் விநியோகம்!
தமிழ்நாடு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள், வீடு, வீடாக, ரேசன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம். ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தின்படி ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பை பெறலாம்.
தி.மலை-சென்னை ரயில் பயண நேரம் ஜன-1 முதல் குறைந்தது!
திருவண்ணாமலை-சென்னை ரயிலின் பயண நேரம் ஜனவரி 1 முதல் மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து இனி அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9:50 மணிக்கு சென்று அடையும். சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலையை இரவு 11:40 மணிக்கு வந்தடையும்.
செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!
தமிழ்நாடு அரசு செங்கத்தை பேரூராட்சியை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, வந்தவாசி போன்ற பேரூராட்சிகளின் வரிசையில் இப்போது செங்கமும் இணைந்துள்ளது. அதிகரித்து வரும் நகரமயமாக்கல், நிர்வாகத் தேவைகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான அத்தியாவசிய வசதிகளை வழங்குதல் மற்றும் எதிர்கால வளர்ச்சியை செயல்படுத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டில் அதீத வெப்பம் பதிவு!
கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2024ல் அதீத வெப்பம் பதிவு; இந்தியாவில் 1901க்கு பிறகு 2024 அதிக வெப்ப ஆண்டாக இருந்தது வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் 2025ம் ஆண்டும் வெப்பம் மிகுந்த ஆண்டாகவே இருக்கக்கூடும். இந்திய வானிலை ஆய்வு மையம்
பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு!
நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது..இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை!